Homeசெய்திகள்தமிழ்நாடு"1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்"- சத்யபிரதா சாஹு பேட்டி!

“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!

-

 

"1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்"- சத்யபிரதா சாஹு பேட்டி!

1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று (ஏப்ரல் 18) நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததாவது, “தமிழகத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை (ஏப்ரல் 19) மாலை 06.00 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் 10.92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளனர். தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. சி- விஜில் செயலி மூலம் நேற்று வரை 4,861 புகார்கள் வந்துள்ளன. மாநில காவல்துறையினர், ரிசர்வ் போலீசார் என மொத்தம் 1.3 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!

1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படவுள்ளன. 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனை ஏற்பட்டால் உடனே சரி செய்யவும், அதனை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 44,801 வாக்குப்பதிவு மையங்களில் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிப்பு நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ