தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில், ஒரே நாளில் 1.36 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறைத் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 634 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (நவ.09) ஒரே நாளில் மொத்தமாக இயக்கப்பட்ட 2,734 பேருந்துகளில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 700 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
“2024- ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!
மேலும், இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்து 613 பேர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவுச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.