- Advertisement -
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாரய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர்புடைய மாதேஷ், கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், விஜயா, ஜோசப்ராஜா, ஹரி முத்து, சின்னதுரை, கதிரவன், சிவக்குமார், ஷாகுல் ஹமீது மற்றும் கண்ணன் ஆகிய பத்து நபர்களை 6 நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களிடம் கள்ளக்குறிச்சி விஷ சாரய சம்பவத்தில் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்னர்.