பழனியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அசைவ உணவகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.
ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி – புது தாராபுரம் சாலையில் ஜவகர் நகர் அருகே புதிதாக தக்வா என்ற பெயரில் பிரியாணி உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு, முதலில் பிரியாணி வாங்கும் 300 பேருக்கு 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால், கடையின் முன்பு பிரியாணியை வாங்குவதற்கு 10 ரூபாய் நோட்டுகளுடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் தீ விபத்து!
முதலில் 300 பேருக்கு 10 ரூபாய் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பின்பும், கூட்டம் அதிகமானதால் விற்பனை விலையில் பாதி விலைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 10 ரூபாய் பிரியாணியை வாங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே பலர் கடையில் தங்கள் செல்போன் நம்பரைக் கொடுத்து பதிவுச் செய்து 10 ரூபாய் சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.