Homeசெய்திகள்தமிழ்நாடு100 சிறுவர்களை ஐபிஎல் போட்டிக்கு அழைத்துச்சென்ற உதயநிதி

100 சிறுவர்களை ஐபிஎல் போட்டிக்கு அழைத்துச்சென்ற உதயநிதி

-

u

சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின். இத்தகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சரும் ஆகியிருக்கிறார் இவர் தனது தொகுதியில் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வருகிறார். அதனால் தான் இவர் அமைச்சர் ஆனால் இதேபோன்று அனைத்து தொகுதி மக்களுக்கும் நலன் கிடைக்கும் என்று திமுக அமைச்சர்கள் சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை காண டிக்கெட் எடுத்து உள்ளே சென்று பார்க்க முடியாத கிரிக்கெட் ரசிகர்களை தன் சொந்த செலவில் கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று ஐபிஎல் போட்டியினை காண வைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இது குறித்து அவர், ‘சென்னை சேப்பாக்கம் தொகுதியில், கிரிக்கெட் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு IPL போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் முயற்சியாக, வட்டம் 62ஐ சேர்ந்த 100 பேரை சென்னை ஐபிஎஸ்& லக்னோ ஐபிஎல் இடையேயான போட்டிக்கு அழைத்துச்சென்றோம். CSK வெற்றியால் மகிழ்ந்த அவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ