Homeசெய்திகள்தமிழ்நாடுரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!

ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!

-

 

Radhakrishnanசென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாகத் தொடர்புடையத் துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று (ஜூலை 08) மாலை 04.00 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.

வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி

அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சென்னையில் செயல்படுத்துவது, உரிமைத்தொகையை வழங்கும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, பயனாளிகளைக் கண்டறிவது, நியாய விலைக்கடைகளைக் கண்டறிவது உள்ளிட்டவைக் குறித்து ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை செய்தார்.

“தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ரேஷன் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள், சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் முகாம்கள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!

தன்னார்வலர்கள் மூலம் பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும். பயோ மெட்ரிக் கருவிகளை மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகைத் திட்ட பயனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கும் முகாம்களுக்கான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ