ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும்- தமிழக அரசு
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளிகளுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளிகளுக்கு ரூ. 1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வான அனைவருக்கும் ரூ.1000 சென்று சேர்ந்துள்ளது. அதன்படி, இந்த மாதம் 1.06 பயனாளிகளுக்கும் இந்த மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. பயனாளர்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.