Homeசெய்திகள்தமிழ்நாடு108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.

-

பர்கூர்  வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், தேவர்மலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்று அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றது..

பர்கூர் அருகே எருமைக்குட்டை வனப்பகுதியில் வந்த போது 108 வாகனத்திலேயே சின்னமாதிக்கு பிரசவம் நிகழ்ந்து பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமுடன் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.இந்தப் பணியை சிறப்பாக செய்த அவசரகால மருத்துவ நுட்புநர் செந்தில்நாதன் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினர்..

தமிழ்நாடு அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு விசுவாசியாக பணியாற்றும் தாசில்தார் செல்வக்குமார்!

MUST READ