‘108 ஆம்புலன்ஸ்’ ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் நவம்பர் 04- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை திருவள்ளூர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நவம்பர் 05- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பூந்தமல்லி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஓட்டுநருக்கான கல்வித்தகுதி 10- ஆம் வகுப்பாகவும், மருத்துவ உதவியாளருக்கான கல்வித்தகுதி பி.எஸ்.சி. நர்சிங் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாகத் தேர்வுச் செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான பயிற்சி வழங்கப்படும். இந்த நாளில், தங்கும் வசதி செய்துத் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களாகத் தேர்வுச் செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 73974- 44141, 87544-35247, 73977- 24812 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
பணியில் தேர்வுச் செய்யப்படுபவர்கள், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.