Homeசெய்திகள்தமிழ்நாடு10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

-

- Advertisement -

தேர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.03 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 08ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து 9,10,024 மாணவர்கள், 28,827 தனித்தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் என மொத்தம் 9,39,086 பேர் தேர்வு எழுதினர். தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது மதிப்பெண்களை பார்த்து வருகின்றனர். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.03 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4,22,591 மாணவிகளும் (94.53 %), 3,96,152 (88.58%) மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ