Homeசெய்திகள்தமிழ்நாடு10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் - இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்!

-

plus two exam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) 24.02.2024 (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யும் முறை. தனித்தேர்வர்கள் www.dge.tn.govh என்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click’ செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION MARCH / APRIL-2024 HALL TICKET DOWNLOAD”என்ற வாசகத்தினை “Click” செய்து தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச்/ ஏப்ரல் 2024பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்துக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு தேர்வரும் தேர்வெழுத மார்ச்/ஏப்ரல்-2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.h என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ