Homeசெய்திகள்தமிழ்நாடு"11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

தமிழகத்தில் இன்று (நவ.18) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (நவ.18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

அதேபோல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை (நவ.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 20- ஆம் தேதி ஒன்பது மாவட்டங்களிலும், நவம்பர் 22- ஆம் தேதி 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ