கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக்.14) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்வு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் அக்டோபர் 16, 19, 20 ஆகிய தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.