தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!
அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம், ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மானும், மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலனும், ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன், ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தற்பகராஜ், உயர்கல்வித்துறை துணைச் செயலாளராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன் குமார், சென்னை மத்திய மண்டல துணை ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.