தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடுகள்
இன்று ஒரே நாளில் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களான மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், பன்னீர் திராட்சை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய கலைப்பொருட்கள், உணவுப் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெற்றுத்தரக் கூடிய சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சஞ்சய்காந்தி, “மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், மைலாடி கற்சிற்பம், ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, நகமம் காட்டன் புடவை, மயிலாடி கல் சிற்பம் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு இன்று புவிசார் குறியீடு கிடைத்துவிட்டது. 2003- ஆம்ம் ஆண்டு ஒன்றிய அரசின் தொழில், வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறனால் புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
முரசொலி மாறனால் உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் துவங்கி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற பொருட்களுக்கு விற்பனை வாய்ப்பு ஏற்படும். 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து நாட்டில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளது” என்றார்.