Homeசெய்திகள்தமிழ்நாடு11 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!

11 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி – தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அதன்படி, தனியார் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டச் செய்தியாளர் தாக்கப்பட்ட நிலையில், அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரின் துணை கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா, எஸ்.பி.யாகப் பதவி உயர்வுப் பெற்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பக்கெர்லா செபஸ் கல்யாண், பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பெருமாள், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருநகர சென்னை கொளத்தூர் துணை ஆணையராக இருந்த சக்திவேல் சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

”விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் உள்ளது”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

மேலும், பல்வேறு பிரிவுக் காவல் அதிகாரிகள் ஐந்து பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ