Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த 11 நாகை மீனவர்கள் விடுதலை

-

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 நாகை மாவட்ட மீனவர்களை, அந்நாட்டின் ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது.

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 11 மீனவர்கள், சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 24 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் சிறைபிடித்தனர்.

fishermen arrested

தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 11 பேருக்கும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 மீனவர்களும் காவல்முடிந்து இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, நாகை மீனவர்கள் 11 பேரையும், நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ