Homeசெய்திகள்தமிழ்நாடுஉளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர்...

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

-

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய காரை குலதெய்வ கோவிலில் பூஜை செய்வதற்காக மனைவி சரண்யா மற்றும் 3 குழந்தைகளுடன் உளுந்துர் பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுநெமிலி கிராமம் அருகே திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஈச்சர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மனைவி சரண்யா, 3 குழந்தைகள் மற்றும் ஈச்சர் லாரியில் சென்ற 7 கூலி தொழிலாளிகள் என 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை  போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ