Homeசெய்திகள்தமிழ்நாடுசெஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

-

- Advertisement -

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. இதேபோல், மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அஜர்பைஜானை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றது. இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற இந்திய அணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள சமுக வலைதள பதிவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் தமிழக அரசு நடத்தியதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது புதாபெஸ்ட் செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்றுள்ளதாகவும், இது அற்புதமான பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

https://x.com/mkstalin/status/1837868459532996616

நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளை கடந்து, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்,  இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனைக்கு வாழ்த்துகள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிபிட்டுள்ளார்.

MUST READ