தமிழகத்தில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்துள்ளது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. அடுத்தபடியாக மதுரை நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தி, நாகையில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதேபோல், ஈரோடு, தூத்துக்குடி, திருச்சியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும், தஞ்சையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது