Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில் வேளாண் தொழில் வழித்தட பணிகள் தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில் வேளாண் தொழில் வழித்தட பணிகள் தொடக்கம்

-

டெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில் வேளாண் தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு அரசு, வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்க வேளாண் தொழில் வழித்தடம் அமைக்க அனுமதி அளித்திருந்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூ.1,170 கோடியில், வேளாண் பெரு தொழில் வழித்தடம் அமைக்கும் பணிகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கி உள்ளது.

tamilnadu assembly

இந்த வேளாண் தொழில் வழித்தட திட்டத்தை தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற, நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது வசதி மையங்கள், புதிய தொழிற்பேட்டைகள், சாலை வதிகள் அமைக்கப்படுகிறது. மேலும், வேளாண் தொழில் வழித்தட திட்டத்தின்கீழ் தஞ்சாவூரில் உணவுத்தொழில் பூங்கா, குளிர்ப்பதன கிடங்குகளும் அமைக்கப்பட உள்ளன

.

MUST READ