திருமணத்திற்கு சென்ற வேன் விபத்து- 12 பேருக்கு அதிஷ்டம்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட வேனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சேலத்தில் இருந்து சென்னை எழுப்பூரில் நடைபெறும் திருமணத்திற்க்காக 12 பேர் மஹேந்திரா டூரிஸ்டர் வேன் ஒன்றில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். வேனை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய் சாந்த் (24) ஓட்டி வந்துள்ளார்.
அப்போது குரோம்பேட்டை, எம்.ஐ.டி மேம்பாலம் அருகே வேனின் டயர் திடீரென வெடித்ததால் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேன் ஓட்டுனர் உட்பட பயணித்த அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் காயம்பட்டவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கிரேன் வாகனம் இயந்திரம் மூலம் வேனை சாலையின் ஓரம் அப்புறபடுத்தினர். இதனால் தாம்பரம், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சீர் செய்யும் பாணியில் போலீசார் ஈடுபட்டனர்.