
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம்!
மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணைதளப் பக்கங்களுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். அதேபோல், பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்கள் உறுதிமொழி படிவத்தில் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வரும் மே 19- ஆம் தேதி 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மே 17- ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்” என்றார்.
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை- அன்புமணி கண்டனம்
இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க தாமதமாக வந்ததற்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.