- Advertisement -
ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் சென்னை, ஆவடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக திருவண்ணாமலை அருகே பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஹரி என்பவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.