
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 21) ஒரே நாளில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
“மோடி ஆட்சியில் ரயில் பயணிகள் அவதி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
அதன்படி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மீனம்பாக்கத்தில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 107.96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!
தமிழகத்தில் இன்னும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில், கடுமையாக வாட்டி வதைத்து வரும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.