சென்னையில காவல்துறையினரை அவதூறாக பேசிய ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை மெரினா லூப் சாலையில் நின்றிருந்த நான்கு சக்கர வாகனத்தை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறினர். அப்போது, காரில் இருந்து வெளியே வந்த சந்திர மோக, அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர்.
இதனிடையே சந்திரமோகன், அவரது தோழி ஆகியோர் காவல் துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருவரையும் போலிசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன்பு சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோரை போலிசார் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.