Homeசெய்திகள்உலகம்ஃபோர்டு நிறுவனத்தில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு

ஃபோர்டு நிறுவனத்தில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு

-

 ஃபோர்டு நிறுவனத்தில் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருந்தார்.

மறைமலை நகரில் செயல்படாமல் இந்து வரும் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஃபோர்டு அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாகத் தெரிகிறது. ஃபோர்டு நிறுவனமானது மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செயல்படத் தொடங்கினால் பலஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மீண்டும் தொழில் தொடங்கும் ஃபோர்டு

இம்முறை இந்தியாவில் புதிய கார்களைத் தயாரிக்காமல், CBU (Completely Built Unit) முறையில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ