
15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
ரஜினி பட இசையமைப்பாளர் மறைவு… சோகத்தில் திரையுலகம்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு அமைத்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு, அரசாணையையும் வெளியிட்டுள்ளார். மேலும், அரசாணை தொடர்பான கடிதங்களை அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கும் முறைப்படி அனுப்பி வைத்துள்ளார்.
பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை… கார் ஓட்டுநர் கைது…
மொத்தம் 14 பேர் கொண்டக் குழு எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து, அதனை தமிழ்நாடு அரசுக்கு அறிக்கையாக அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.