- Advertisement -
உதகையில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்
உதகையில் கோடை சீசன் கலைக்கட்டி உள்ள நிலையில் பிரம்மாண்ட மலர் அலங்காரத்துடன் 18-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்குகிறது.
உதகைக்கு கோடை விடுமுறையை ஒட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்காக வண்ண ரோஜா மலர்களை கொண்டு 30 அடி உயரத்தில் ஈபில் டவர், யானை, காலனி, பேட், கால்பந்து உள்ளிட்ட பலவகை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர பூங்காவில் வளர்க்கப்படும் 4500 ரக ரோஜா செடிகளை பூத்திருக்கும் மலர்களையும் மக்கள் கண்டு ரசித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியைக் காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து சுற்றுலாத்துறை பிரம்மாண்டமாக செய்துள்ளது.