Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

தமிழில் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகப் பெரிய அளவில் மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார்.  மாநாட்டிற்கு பின்னர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் அறிவிப்பு தாமதமாகி வந்தது. இதனால் மாவட்ட அளவில் கட்சி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு வந்தது. மேலும் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.

 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சியை அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதில் முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரியலூர் மாவட்ட செயலாளராக  சிவக்குமார், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக B.ராஜ்குமார், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக விஜய் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சீனுவாசன், கடலூர் வடக்கு செயலாளராக கே ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாலு,  கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக சதீஷ்குமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாகையில் சீமானின் கூடாரம் காலி...தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக காந்தி ராஜ், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக  மோகன் ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு வெங்கடேஷ், ஈரோடு மாநகர் பாலாஜி, ஈரோடு மேற்கு பிரதீப் குமார் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக அறவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு மாவட்ட செயலாளராக விக்னேஷ், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக சம்பத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய மாவட்ட செயலாளராக பார்த்திபன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக மதன் மற்றும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ