Homeசெய்திகள்தமிழ்நாடு2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

-

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரியில் தமிழ் நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்து கொண்ட நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து 175.87 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் 79.41% மட்டுமே கிடைத்திருப்பதாகவும் சுமார் 96.45 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரையில் 8.7 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டிய இடத்தில் வெறும் 2.7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதாகவும் இதனால் சுமார் 6 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் நிலுவையில் இருப்பதாகவும் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்கள்.

கர்நாடகா அரசின் வாதங்களில் இருந்து அவர்களது நான்கு அணைகளில் இருந்தும் அவர்களது குடிநீர் தேவைக்கான போதுமான தண்ணீர் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.

குடிநீர் தேவைகளுக்காக அவர்களுக்கு வெறும் நான்கு டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே போதும் என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி முக்கிய அணைகளில் 19.17 டி.எம்.சி. தண்ணீர் இருக்கின்றது. அதனால் தமிழ்நாடு அரசுக்கு நிலவைத் தண்ணீரை கர்நாடகா திறந்து விடுவதில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு கடந்த ஆண்டை போல் அல்லாமல் நடப்பு ஆண்டில் போதுமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் தமிழ் நாட்டிற்கு தர வேண்டிய நிலுவை நீரான 6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மேகதாது அணை கட்டுகாரங்களை காவேரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் விவாதிக்க கூடாது என்ற தங்களது பழைய நிலைப்பாட்டை மீண்டும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை கேரள கடற்கரை பகுதிகளில் மே 31ஆம் தேதி தொடங்கி இயல்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடுவதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் தமிழ்நாட்டில் வேளாண் சார்ந்த முக்கிய மாதங்கள் என்பதால் நிலுவையில்லாமல் ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி தண்ணீரை திறந்து விட உறுதி செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

காவிரியில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கழிவுநீர் கலக்கப்படும் விவகாரத்தையும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/vaiko-statement/86210

கேரளா அரசு சிலந்தியார் என்ற பகுதியில் தடுப்பணை கட்டும் நிலையில் கடைநிலை மாநிலம் என்ற உரிமையில் தமிழ்நாடு அரசிடம் அது சம்பந்தமான விவரங்களை தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இதனால் பெரும் சட்ட சிக்கல் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவரங்களை கேரளா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் கொடுத்ததா என்று தெரியவில்லை. எனவே ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து ஆவணங்களையும் கேரளா அரசிடமிருந்து பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

MUST READ