Homeசெய்திகள்தமிழ்நாடு2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

-

 

2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
Photo: ED

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோரின் இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.

“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 03) காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் இல்லம், அவருடைய நிதி நிறுவனம் உள்பட நான்கு இடங்களில் சோதனை தொடங்கப்பட்டது.

அன்றைய தினம் மாலை 06.00 மணியளவில் சங்கர் இல்லம் மற்றும் நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நிறைவுப் பெற்றது. 24 மணி நேரத்தைக் கடந்து தனலட்சுமி மார்பிள்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற சோதனை நேற்று (ஆகஸ்ட் 04) காலை நிறைவுப் பெற்றது.

பிற்பகலில் லக்கி டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்திலுடன் டி.எஸ்.பி. அறக்கட்டளை அலுவலகத்துக்கு அமலாக்கத்துறையினர் சென்று, சோதனை நடத்தினர்.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!

கடந்த இரண்டு தினங்களாக ஆறு இடங்களில் நீடித்த இந்த சோதனை, நள்ளிரவு நிறைவுப் பெற்றது.

MUST READ