தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று கா ணொ லி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி செனனை சென்ட்ரலில் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிது.
எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நா கர்கோவிலை சென்றடையும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல்2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
இதேபோல், பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும்.