Homeசெய்திகள்தமிழ்நாடுமதுபானம் குடித்த 2 பேர் பலி- பார் உரிமையாளர் கைது

மதுபானம் குடித்த 2 பேர் பலி- பார் உரிமையாளர் கைது

-

- Advertisement -

மதுபானம் குடித்த 2 பேர் பலி- பார் உரிமையாளர் கைது

தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் பார் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேர்கொண்டுவருகின்றனர்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் உரிமம் பெற்ற மதுக்குடிப்பகத்தில் மது குடித்த இருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலந்திருந்தது தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். இதனிடையே தஞ்சையில் சட்டவிரோத மது விற்பனையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக் ஊழியர்களான டாஸ்மாக் மேற்பார்வையாளார் முருகன், 3 விற்பனையாளர்கள்சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பாருக்கு வருவாய் மற்றும் காவல்துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தஞ்சையில் மது வாங்கி குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பார் உரிமையாளர் பழனிவேல், ஊழியர் காமராஜ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பார் உரிமையாளர் பழனிவேல், ஊழியர் காமராஜிடம் தஞ்சை கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

MUST READ