Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ். இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆகாஷ், தனது வகுப்பு தோழரான பூசாரிபட்டியை சேர்ந்த ஜான் (14) உடன் கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் கிணற்றில் மூழ்கினர்.

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த
கோவில்பட்டி தீயணைப்புத்துறையினர் மற்றும் நாலாட்டின்புதூர் போலீசார் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது,ஆகாஷ், ஜான் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ