Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி!

தஞ்சையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி!

-

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல். இவரது பழைய வீட்டை இடிக்கும் பணியை அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன், அய்யம்பேட்டை இரட்டை தெருவை சேர்ந்த குமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சம்பவம் நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

MUST READ