Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை

ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை

-

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கும் இந்த மாணவர்கள் இடையே ‘ரூட் தல’ விவகாரத்தில் அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக கல்லூரிகளுக்கு சென்று ரயில்வே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரயில்கள், ரயில் நிலையங்களில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க ரயில்வே போலீஸார், ஆர்பிஎஃப் போலீஸாரின் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

படியில் தொங்கி செல்வது, ரயில் பெட்டி மீது ஏறுவது, செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பது,  வந்துகொண்டிருக்கும் ரயில் முன்பு நின்று ‘செல்ஃபி’ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

MUST READ