பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்தை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் இதை தவிர்ப்பதற்கு தொடர்ச்சியாக போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதற்கட்டமாக 12 வழிதடத்தில் 20 கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 22,000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை கண்டறிய போக்குவரத்து துறையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆராய்ந்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை அறிவித்த நிலையில் குறிப்பிட்ட அந்த வழித்தடங்களில் மட்டும் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,
29A பெரம்பூர் to எக்மோர்
M88 போரூர் to குன்றத்தூர்
M88 போரூர் to வடபழனி
54R ராமபுரம் to குமணசாவடி
54R ராமபுரம் to டைட்டில் பார்க்
153 சி. எம். பி. டி to குமணசாவடி
147 தி. நகர் to அம்பத்தூர்
56A எண்ணுர் to வள்ளலார் நகர்
38A மாதவரம் to பிராட்வே
5G கண்ணகி நகர் முதல் வேளச்சேரி
21G கிண்டி to பிராட்வே
21X கிண்டி இருந்து மந்தைவெளி வழியாக பிராட்வே செல்லும் பேருந்து என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்படும்.
மாணவர்கள் அதிகமாக படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்யக்கூடிய சூழல் இருக்கிறது. எனவே, இந்த இடத்தில் முதற்கட்டமாகவும் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.