Homeசெய்திகள்தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!

நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!

-

- Advertisement -

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
File Photo

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-ல் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 3,000 கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூபாய் 29 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு. வழங்கப்பட்டு வருகிறது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ