20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 4000 பேர் இந்த தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய வருகின்றனர் இவர்களுக்கு கடந்த வருடம் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு பத்து சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக கூறி இன்று காலை முதல் அரசு தேயிலைத் தோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர் மகிழ்ச்சியுடன் தங்களது இருப்பிடத்திற்கு சென்றனர் .