தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐசி’…. முதலில் இந்த டாப் ஹீரோ தான் நடிக்க இருந்தாரா?
அதன்படி, ஏழு மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் மற்றும் 13 சார் ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகளாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனாமிகா, நீலகிரி மாவட்டத்திற்கு கௌசிக், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஷபீர் ஆலம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அப்தாப் ரசூல், தருமபுரி மாவட்டத்திற்கு கௌரவ் குமார், கோவை மாவட்டத்திற்கு ஸ்வேதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வசந்த் ரவியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு!
மேலும், நாராயண ராவ், பொன்மணி, கேத்ரின் சரண்யா, பிரியங்கா, அர்பித் ஜெயின், பல்லவி வர்மா, எஸ்.கோகுல், குணால் யாதவ், அபிலாஷா கவுர், திவ்யான்சு நிகம், வாகே சங்கெத் பல்வந்த், ராஷ்மி ராணி, சௌமியா ஆனந்த் ஆகியோர் சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.