Homeசெய்திகள்தமிழ்நாடு"கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

"கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
File Photo

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் மே 23- ஆம் தேதியிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!

ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் தான் 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறும் நடவடிக்கை ஆகும். 500 சந்தேகங்கள், 1,000 மர்மங்கள், 2,000 பிழைகள் என ரூபாய் நோட்டு மதிப்புகளை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ