2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்தது கூட அறியாமல், ஒரு லட்சம் ரூபாய்க்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த மூதாட்டியைக் கண்டு பலரும் பரிதாபப்பட்டனர்.
பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
ராஜம் என்கின்ற இந்த மூதாட்டி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள வங்கிக்கு வந்து ஆதங்கத்துடன் புலம்பிக் கொண்டிருந்தார். இவரது கைகளில் 2,000 ரூபாய் நோட்டுகள்; மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டிருந்த இந்த மூதாட்டி, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, காலக்கெடு அறிவித்த அரசின் உத்தரவை அறியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
மன்னார்குடி அருகே கிராமத்தைச் சேர்ந்த இவர், கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். அரசு வழங்கும் ஓய்வூதியத்தைப் பெறும் இவர், அண்மையில் சென்னை சென்றிருந்தார். அப்போது தான் மூதாட்டிக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப் பெற்றுள்ளது என்பது தெரிய வந்தது.
உடனடியாக ஊர் திரும்பிய மூதாட்டி, 2,000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், இவற்றை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறியதால், தனது வாழ்நாள் சேமிப்பை என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து நிற்கிறார்.
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
கெடு முடிந்தாலும், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்ற தகவலை யாராவது கூறியிருந்தால், அவர் நிச்சயம் மீண்டும் சென்னை சென்று தனது ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டு ஏமாற்றத்தைத் தவிர்ப்பார் என நம்பலாம்.