Homeசெய்திகள்தமிழ்நாடு"2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு"- நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு!

“2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு”- நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

 

விஜய் கால்ஷீட்டுக்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்... ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?

வருகிற 2026- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது தான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

“எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!

இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு!

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தைக் கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் விஜய் கட்சித் தொடங்கியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ