Homeசெய்திகள்தமிழ்நாடு20ம் ஆண்டு நினைவு நாள் : முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் மரியாதை

20ம் ஆண்டு நினைவு நாள் : முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் மரியாதை

-

- Advertisement -
kadalkanni

தமிழகம் முழுவதும் இன்று முரசொலி மாறனின் 20வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

23ம் ஆண்டு நினைவு நாள் : முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் மரியாதை

இதில் ஒரு பகுதியாக தெற்கு மாவட்டம் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி அரசு பள்ளி அருகே அமைந்துள்ள உருவ சிலைக்கு 20வது நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் ஏ.எம்.யுவராஜா, வினோத் குமார், மாறன்குமார், பாபு, ஜசக்நேசகுமார், ஜே.வெங்கடேசன், மனோகர், டெல்லிமோகன், சுதாகர், ஜெய்சங்கர், ஸ்ரீதர், இ.வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

MUST READ