மணிப்பூர் தொடர்பான மோதல்கள், அமளிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் என பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!
மணிப்பூர் விவகாரம் தொடர்பான மோதலோடு, ஜூலை 20- ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், மோதலுடனே முடிவடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட முக்கிய அலுவல்களை 17 அமர்வுகளில் 44.15 மணி நேர பணிகளோடு, மக்களவை நிறைவுச் செய்தது.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள், பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடுவது போன்ற நடவடிக்கைகளால் மக்களவை தனது முழு வேலை நேரத்தில் 45% நேரம் மட்டுமே அலுவல்களில் செலவிட்டது. மீதமுள்ள 55% வேலை நேரம் அடிக்கடி நடைபெற்ற ஒத்திவைப்புகளால் வீணானது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 19 மணி நேரம் நடைபெற்றது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விவாதத்திற்கு பதிலளித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.
முடிவில் வாக்கெடுப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆத்ர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டது கூட்டத்தொடரின் நிறைவு நாளில் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு காரணமானது.
அதே நேரம் மக்களவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு 28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பதற்கான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்று முக்கிய சட்டங்களுக்கான மசோதாக்களைத் தாக்கல் செய்தார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை நிறைவு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தொடரில் அமளிகளுக்கிடையே 20 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நம்பிக்கையில்லா தீர்மானம் தவிர எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஒரே விவாதம், டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதாவாகும்.