Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் 22 வயது இளைஞர் பலி

ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் 22 வயது இளைஞர் பலி

-

- Advertisement -

ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் 22 வயது இளைஞர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் சீமானூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் முன்பு காளையை தழுவ முயன்ற போது காளை கண்ணில் குத்தியதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

alanganallur jallikattu

புதுக்கோட்டை மாவட்டம் சீமானூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து 720 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் காளைகளின் உரிமையாளர்கள் பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயமடைந்த நிலையில் வாடிவாசல் முன்பு காளையை தழுவ முயன்ற திருச்சி மாவட்டம் இச்சிகாமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெயந்த் என்ற மாடுபிடி வீரரின் அவனது கண்ணில் காளை குத்தியதில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ