Homeசெய்திகள்தமிழ்நாடுவயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு

-

- Advertisement -

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கி கூடலூர் பகுதியை சேர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு கேரளாவில் மீட்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீரன், ஜானிடாம் வர்கிஸ் ஆகியோரது தலைமையில் மீட்புக்குழுவினரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

tamilnadu assembly

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டு கேரளாவில் வசித்து வந்த 21 பேர் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் காணாமல் போன 25 தமிழர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

 

MUST READ