Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவ படிப்புகளில் சேர 6 நாட்களில் 25,000 மாணவர்கள் விண்ணப்பம்

மருத்துவ படிப்புகளில் சேர 6 நாட்களில் 25,000 மாணவர்கள் விண்ணப்பம்

-

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புகளில் சேர 6 நாட்களில் 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 9050 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் பல் மருத்துவ படிப்புக்கு 2,200 இடங்கள் உள்ளன. இந்த நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் அரசு மருத்துவ கல்லூரி, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. இந்த படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 8ம் தேதி விண்ணப்ப பதிவு செய்வதற்கு இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமையில் மாற்றம் வருமா?

இந்நிலையில் மருத்துவப்படிப்புகளில் சேர 6 நேற்று மாலை நிலவரப்படி, 25 ஆயிரத்து 209 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளதாக மருத்துவ கல்வி மாணவர் தேர்வு குழு தெரிவித்தது. இவர்களில் 17 ஆயிரம் பேர் அரசுக் கல்லூரிக்கும், 8 ஆயிரம் பேர் தனியார் கல்லூரிக்கும் விண்ணப்பித்துள்ளனர். அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு வரும் 14ம் தேதி மத்திய அரசு முதற்கட்டமாக தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 21ம் தேதி மருத்துவத் தேர்வுக்குழு மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இக்கலந்தாய்விற்கான தகுதி பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியவுடனேயே 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல் உள்ளிட்ட 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.

 

MUST READ