தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..
இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று (நவ.14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று (நவ.14) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள ஆறு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..
அதேபோல், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை (நவ.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 16- ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.